சேலம் பாரதியார் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் பேச்சு போட்டி

சேலம் பாரதியார் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் பேச்சு போட்டி

பரிசு வழங்கி கவுரவிப்பு

சேலம் பாரதியார் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது.

நேரு யுவகேந்திரா மற்றும் பாரதியார் மக்கள் நல்வாழ்வு சங்க தொண்டு நிறுவனம் சார்பில் எதிர்கால இந்தியா-2047 என்ற தலைப்பில் முன்கூட்டியே இளைஞர்கள் மனதில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் இடும் உணர்வை விதைக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டது.

சின்னதிருப்பதி ஜெயராம் கல்லூரியில் நடந்த இந்த போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சேலம் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் தேவிகா தலைமை தாங்கினார்.

நேரு இளைஞர் மையத்தின் மாவட்ட இளையோர் அலுவலர் டார்வின் சார்ல்ஸ்டன் முன்னிலை வகித்தார். பாரதியார் மக்கள் நல்வாழ்வு சங்க ஆலோசகர் திவ்யபிரியா வரவேற்றார். இதில், ஜெயராம் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத், கல்லூரி முதல்வர் ஆறுமுகம், மாசு கட்டுப்பாட்டு சங்க தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்ந்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். ராணி கண்ணன், கவிஞர் முத்துமாரியப்பன், பேராசிரியர்கள் முருகேசன், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாரதியார் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் இயக்குனர் தேவிகா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story