கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பேச்சுப்போட்டி..!

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பேச்சுப்போட்டி..!

பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு "சட்டமன்ற நாயகர் - கலைஞர்" குழுவின் சார்பில் பேச்சுப்போட்டி முன்னாள் பேரவை தலைவர் ஆவுடையப்பன் மற்றும் முன்னாள் பேரவை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தனது பேச்சு திறமையை வெளிப்படுத்தினர். பின்னர் முன்னாள் பேரவை தலைவர் ஆவுடையப்பன் பேசுகையில், திமுக பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை பின்பற்றுகிறது. மனிதனுக்கு ஏற்ற தாழ்வு, ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் இருக்க கூடாது. பகுத்தறிவு இல்லை என்றால் நாம் மனிதனே இல்லை. பகுத்தறிவு, சுயமரியாதைக்கு காரணமே திமுகதான்‌. இந்தியாவில் உயர்கல்வியில் தமிழகம் 53 சதவீதம் பெற்றதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் என பேசினார். தொடர்ந்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழ் இனத்திற்காக போராடியவர் கலைஞரை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. இறுதி மூச்சு வரை தமிழுக்காக வாழ்ந்தவர் அவர். கம்பராமாயணம் போல கலைஞரை பற்றி நீண்ட காலம் பேசிக்கொண்டே போகலாம். மெரினாவில் பேனா சின்னம் வைப்பதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தாலும் தமிழகம் முழுவதும் பேனா வடிவில் தேர் வலம் வந்துள்ளது‌.

அதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். காமராஜரையே திமுகவை சேர்ந்த ஒருவர் தோற்க்கடித்த வரலாறும் உண்டு. உலக வரலாற்றிலேயே எவரும் 13 முறை வெற்றிபெற்றதில்லை‌ என பேசினார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் என ஏறாளமானோர் பங்கேற்றனர்

Tags

Next Story