அகிலாண்டாபுரம் பிரிவில் அமைக்கப்பட்ட வேகதடை

அகிலாண்டாபுரம் பிரிவில் அமைக்கப்பட்ட வேகதடை

அகிலாண்டாபுரம் பிரிவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்களின் நீண்ட நாள் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறப்பட்டது.


அகிலாண்டாபுரம் பிரிவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்களின் நீண்ட நாள் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் கோவை திருச்சி நெடுஞ்சாலை அகிலாண்டாபுரம் பிரிவும், அய்யாசாமி நகர் காலனி பிரிவும் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் நான்கு சாலைகளும் சந்திக்கும் இடத்தில் வேகத்தடைகள் மற்றும் எந்த ஒரு எச்சரிக்கை விளக்குகளும் இல்லை எனவும், போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகளும் எந்தவொரு குறியீடுகளும் இல்லை எனவும், எனவே அப்பகுதியில் வாகன நெரிசல்கள்‌ ஏற்படுவதோடு வாகன விபத்துகளும் ஏற்படுகிறது என்றும், வாகன ஓட்டிகளின் கோரிக்கையை முன்வைத்திருந்தார். இதனால் நேற்று அகிலாண்டாபுரம் பிரிவில் நெடுஞ்சாலை துறை வேகத்தடையை அமைந்துள்ளது. இதனால் பெரும் வாகன விபத்துகளும், தினசரி வாகன நெரிசலில் சிறு சிறு வாகன விபத்துகளும் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story