சிவகாசியில் 26 இடங்களில் வேகத்தடை...

சிவகாசியில் 26 இடங்களில் வேகத்தடை...

வேகத்தடைகளை நேரில் பார்வையிட்ட மேயர்

சிவகாசியில் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட வேகத்தடைகளை நேரில் பார்வையிட்ட மேயர்..
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 26 இடங்களில் வேகத்தடை அமைக்கும் பணிகளை மேயர் சங்கீதா நேரில் ஆய்வு. சிவகாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருகை தந்தார். இதனால் ஆளுநர் வருகையையொட்டி சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பல சாலைகளில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டது. ஆளுநர் வந்து சென்று பல மாதங்கள் ஆகி விட்ட நிலையிலும் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படாமல் இருந்தன. இதனால் பல இடங்களில் சிறிய அளவிலான விபத்துகள் நடைபெற்றன.மேலும் அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்றும் விபத்து ஏற்படு்ம் பகுதிகளில் கூடுதலாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள்,மாநகராட்சி கவுன்சிலர்கள் தொாட்ந்து வலியுறுத்தி வந்தனர்.அதனை தொடர்ந்து மாநகரில் பிரதான சாலைகளான பை பாஸ், வேலாயுத ரஸ்தா ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் 26 வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.வேகத்தடை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தார். மாநகரில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்பட்டாதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story