சாலையில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைப்பு !

சாலையில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைப்பு !

வேகத்தடை

ஈரோடு பழனி சாலையில் விபத்தை தடுக்க மூர்த்தி ரெட்டிபாளையம் பிரிவில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் ஈரோடு - பழனி பிரதான சாலையில் மூர்த்திரெட்டி பாளையம் பிரிவு உள்ளது. இந்த சாலை மூர்த்திரெட்டி பாளையம் வாய்க்கால் மேடு வழியாக என்.எஸ்.என். நகர் அடுத்த காங்கயம் சென்னிமலை சாலை வரை செல்கிறது. இப்பாதையில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்லும் போது வாய்க்கால் மேடு திரும்பும் குறுக்கு பாதையில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி மோதி வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன. எனவே இப்பகுதியில் வேகத்தடை ஒன்றை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால் நேற்று மதியம் இந்த சாலையில் சாலையின் குறுக்கே வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன விபத்துகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொண்டதற்கு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story