சிறப்புலி நாயனார் விழா: ஆயிரம் பேருக்கு அன்னம்
அன்னதானம் வழங்கல்
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் தேவாரப் பாடல் பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 63நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் அவதரித்து வாழ்ந்து முக்தி அடைந்த தலமாகும். அதி தீவிர சிவபக்தராக திகழ்ந்த சிறப்புலி நாயனாரின் பெருமையை ,உலகுக்கு உணர்த்த விரும்பிய இறைவன் ,சிறப்புலி நடத்திய ஆயிரம் பேருக்கு அன்னதானம் நிகழ்ச்சிக்கு ஒருவர் குறைவாக 999 பேர் உணவு அருந்த வந்தனர்.
அப்போது இறைவன் பக்தராக வந்து உணவு அருந்தி நாயனாருக்கு காட்சியளித்தார். இதனை போற்றும் வகையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத பூராட நட்சத்திரத்தில் அவதரித்த சிறப்புலி நாயனார் பூஜையும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
கார்த்திகை மாத பூராட நட்சத்திரமான இன்று இறைவன், சிறப்புலி நாயனாருடன் கோவில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், அரசு வழக்கறிஞர் ராம சேயோன் மற்றும் திரளான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.