சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக ஆன்மீக சொற்பொழிவு

சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக ஆன்மீக சொற்பொழிவு

தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.


தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.

மதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்று வருகிறது. குகன் பக்தி என்ற தலைப்பில் கலைமாமணி திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது.

பக்தி என்ற கல்வியை குருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேச்சு பக்தி என்ற கல்வியை குருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார். குகன் வேடர் குலத்தில் பிறந்தாலும் ராமன் இடத்தில் அளவில்லாத பக்தி கொண்டவன். ராமனுக்கு அன்பின் மிகுதியால் மீனையும் தேனையும் வழங்கினான். மழை பெய்வதும் மகப்பேறும் மகேசன் கையில் உள்ளது என்பார்கள்.

இராமாயணம் மகாபாரதம் கதை சொல்வதும் கேட்பதும் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.நாம் இறைவனிடம் உலகம் முழுவதும் சுபிட்சம் பெற வேண்டும் என்று வேண்ட வேண்டும். தாய் தந்தையர்களை நிந்திக்க கூடாது. வயதில் பெரியவர்கள் சொன்னால் கேட்க வேண்டும். கோபத்தில் தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தக் கூடாது. பக்தி இல்லாமல் செய்கிற செயல் பயன்படாது. நமக்கு பிரச்சனை வரும்போது அதை நிராகரிக்க வேண்டும். யாராவது பாராட்டினால் அது பகவான் கிருபை என்று சொல்ல வேண்டும். குறிப்பாக கஷ்டம் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாது.

இறைவனிடம் அதை நீக்க பிரார்த்தனை செய்ய வேண்டும். தொழுதால் என்று சொல்லாமல் அழுதால் ஆண்டவனை பெறலாம் என்கிறார் மாணிக்கவாசகர். பக்தி என்ற கல்வியை குருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் .எந்த விஷயத்திற்கும் ஒரு குரு வேண்டும். உலகில் தாய் முதல் குரு. குகனின் பக்திக்கு நிகர் எதுவும் இல்லை. சமுதாயத்தில் உள்ளவர்களை பழிக்க கூடாது என்கிறார் வள்ளுவர் இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

Tags

Next Story