தூத்துக்குடியில் பரோட்டா கடையில் கெட்டுப்போன சிக்கன்: வைரலாகும் வீடியோ

தூத்துக்குடியில் பரோட்டா கடையில் கெட்டுப்போன சிக்கன்: வைரலாகும் வீடியோ

கெட்டுப்போன போன இறைச்சி

தூத்துக்குடியில் ஆழ்வார் நைட் கிளப் என்ற புரோட்டா கடையில் கெட்டுப்போன சிக்கனை வழங்கியதாக வாடிக்கையாளர் ஒருவர் கடை உரிமையாளர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ளது ஆழ்வார் நைட் கிளப் என்ற இரவு நேர புரோட்டா கடை மிகவும் பிரபலமான இந்த கடையில் நேற்று வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டிற்கு குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்காக சிக்கனை வாங்கிச் சென்றுள்ளார்.

வீட்டிற்கு வாங்கி சென்று பார்த்தபோது அது கெட்டுப் போன சிக்கனாக இருந்துள்ளது இதைத்தொடர்ந்து அந்த பார்சலை அப்படியே கடைக்கு எடுத்து வந்த வாடிக்கையாளர் கடையின் வெளியே இரவில் உட்கார்ந்து இருந்த உரிமையாளர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது பிரபலமான தங்கள் கடையில் குழந்தைகளுக்கு கொடுக்க கெட்டுப் போன சிக்கனை எப்படி போடுகிறீர்கள் என அவரிடம் கேட்டுள்ளார் அதற்கு உரிமையாளர் அவரிடம் முறையான பதிலை அளிக்காமல் அவரை தர குறைவான வார்த்தைகளில் பேசி திட்டி அனுப்பி உள்ளார் மேலும் நீ எங்கு புகார் அளித்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது தூத்துக்குடியில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் பல்வேறு உணவகங்கள் கெட்டுப் போன சிக்கனை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வாறான ஹோட்டல்களை சீல் வைக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story