ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி

ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி

அரங்கண்டநல்லுாரில் கோடைகால பயிற்சியாக மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.


அரங்கண்டநல்லுாரில் கோடைகால பயிற்சியாக மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப், லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் அரகண்டநல்லுாரில் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி முகாம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. அரகண்டநல்லுார் லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம், லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் ரோட்டரி சங்கம் இணைந்து மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் மூன்று நாள் பயிற்சி முகாம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் வாசன் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் ராஜா சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். விருதுநகர் ரோட்டரி சங்க நிர்வாகி சியாம்ராஜ் முகாமை துவக்கி வைத்தார். விருதுநகர் கம்யூனிகேஷன் கிளப் குழுவினர் மாணவர்களுக்கான பயிற்சியை நடத்தினர். திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் செந்தில்குமார், உறுப்பினர் ராஜேஷ், பள்ளி நிர்வாகிகள் பரணி, பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story