வில்வித்தை போட்டியில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை!

வில்வித்தை போட்டியில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை!

ஸ்போர்ட்ஸ் அகாடமி

குடியாத்தத்தில் நடந்த வில்வித்தை போட்டியில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வேலூர் மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்கம் சார்பில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி கடந்த 12-ந்தேதி குடியாத்தத்தில் நடைபெற்றது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள ஓ.எம்.எஸ். ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். போட்டியின் முடிவில் ஓ.எம்.எஸ். ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் கிருஷிவ், சர்வேஷ்குமார், கவின் வசந்தன், ஐ.ஜே.ராஜஸ்ரீ, திதிவிக்னேஷ், ஆத்விக் வர்ஷன், ஐ.ஜே.லோஹித் கிஷோர், லாயாஸ்ரீ, லலித் மோனிஷ், டாக்டர் கீதா மதாய் ஆகியோர் 27 தங்கம், 5 வெள்ளி, ஒரு வெண்கலம் என்று மொத்தம் 33 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்த மாணவர்களை சங்க நிர்வாகி சாரதி, ஓ.எம்.எஸ். ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் விக்னேஸ்வரராவ் மற்றும் பலர் வாழ்த்தி பாராட்டினர்.

Tags

Read MoreRead Less
Next Story