ராமநாதபுரத்தில் விளையாட்டு போட்டி: சாதனையாளர்களுக்கு பரிசளிப்பு
போட்டியில் வென்ற வீரர்கள்
ராமநாதபுரம் தொண்டியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு இறகு பந்து போட்டி மற்றும் அகில இந்திய இறகுப்போட்டி-2024 மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்களை பாராட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்களை பாராட்டி நம்புதாளை ராலி ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது. தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் மாவட்ட இறகு பந்து கழகம் துணைத் தலைவர் சாதிக் பாட்ஷா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
டாப் டெக்ஸ் முகம்மது பைசல் வரவேற்புரை ஆற்றினார். ரேலி ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ரகமத்துல்லா, ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹிப்பத்துல்லா, இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் எல்ஆர்சி. ராஜசேகர், தொண்டி சேச பங்கு தந்தை வியாகுல அமிர்தராஜ், நம்புதாளை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச்செல்வி ஆறுமுகம், பாரத் பவர் ஜிம் ஆனந்தன் பொரியாளர் சபியுல்லாஹ் ரேலி ஸ்போர்ட்ஸ் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரிசளிப்பு விழாவில் ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி, ராமநாதபுரம் டிஐஜி துரை, முதன்மை மாவட்ட அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், ராமநாதபுரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் நம்பு ராஜேஷ், திருவாடானை அரசு வழக்கறிஞர் கணேச பிரபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டிகளில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற திருச்சி புருஷோத்தமன்,
சரவணன், திருச்சி திவாகர், தேனி குரு சங்மா, காரைக்குடி பிருந்தாவன் வீரபாண்டியன், மணிரத்தனம், நாகர்கோயில் நித்தின் சித்தார்த், திரு ஆகியோர்களுக்கும் மாவட்ட அளவில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பரமக்குடி கல்யாண் குமார், சாயல்குடி கந்தவேல், தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அஹமத் யாசின், மூர்த்தி, பரமக்குடி ராஜேஸ்வரன், ஸ்ரீதரன், தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அப்துல்லா, முகம்மது மூசா ஆகியோர்களுக்கும் 40 வயது மேற்பட்ட ஆண்கள் பிரிவில் மதுரை இம்ரான்,
இளையராஜா, திருச்சி கந்தவேல், காளையார் கோயில் சாத்தையா, அறந்தாங்கி கோகுல், ஜெகன், சென்னை ஹரி, ஜோசப் ஆகியோர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் ரொக்க பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தனர். இராமநாதபுரம் இறகுப் பந்தாட்ட கழக நிர்வாகிகள் பிரபாகரன் ராமமூர்த்தி பேட்மிட்டன் கோர்ட் ஓனர் அசோசியேஷன் நிர்வாகிகள் ராஜசேகர், ஐக்கிய ஜமாத் தலைவர் அயுப் கான், தொண்டி பைத்துல்மால் தலைவர் சையது அலி, பெர்லின் நெய்னார் ஹாஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொண்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியசாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தொண்டி ஸ்போர்ட்ஸ்கிளப் நிர்வாகிகள் ராலி ஸ்போர்ட்ஸ் . மற்றும் ராமனாதபுரம் இறகுபந்தாட்ட கழக நிர்வாகிகள் வள்ளல் சசிக்குமார் ஆகியோர் செய்திருந்தனர் ..