மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டு போட்டி
வாணாபுரம் அடுத்த அரியலுார் வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நடந்தது.
வாணாபுரம் அடுத்த அரியலுார் வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) ராமலிங்கம் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் பழனிமுத்து, மோகன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பலுான் ஊதுதல், படம் வரைதல் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுகளும், 50 மாணவர்களுக்கு உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் சின்னப்பன், ஆசிரியர் கார்த்திகேயன், சிறப்பு ஆசிரியர்கள் அன்னராசு, எழிலரசி, ஆரோக்கிய ஸ்டெல்லா, விமலாராணி, இயன்முறை மருத்துவர் ரேவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
- வாணாபுரம்
- அரியலுார்
- மாற்றுத்திறனாளி
- பள்ளி மாணவர்கள்
- அரசியல்
- சினிமா
- கிரைம்
- அயலக தமிழர்கள்
- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- விளையாட்டு
- வேலைவாய்ப்பு
- ஆன்மீகம்
- உடல்நலம்
- சமையல்
- தொழில்நுட்பம்
- ஆட்டோமொபைல்
- சுற்றுலா
- வீடியோ
- உதயநிதி ஸ்டாலின்
- சனாதனம்
- பதவி விலகல்
- உயர்நீதிமன்றம்
- கூட்டணிப் பேச்சு வார்த்தை
- கூட்டணியில் இருந்து விலகல்
- நாடாளுமன்றத் தேர்தல்