சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு விளையாட்டு போட்டி

X
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட கைதிகள்
சேலம் மத்திய சிறையில் பொங்கல் பண்டிகையையொட்டி கைதிகளுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனி கிளைச்சிறையில் உள்ள கைதிகளுக்கு இடையே தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
அதன்படி கைப்பந்து, கவிதை, கட்டுரை, ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற ஆண் கைதிகள் 85 பேர், பெண் கைதிகள் 15 பேர் என மொத்தம் 100 கைதிகளுக்கு சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறை நல அலுவலர் அன்பழகன், துணை அலுவலர் கோவிந்தசாமி, உதவி சிறை அலுவலர் பிரபாகரன் மற்றும் பெண்கள் சிறை கண்காணிப்பாளர் கீதா, துணை அலுவலர் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
