அனக்காவூரில் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

அனக்காவூரில் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தவசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார அளவிலான மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தவசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார அளவிலான மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி திட்டத்தின் கீழ் அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தவசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார அளவிலான மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் பள்ளி நடைபெற்றது. இவ்விழாவில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டு ஓட்டப்பந்தயம் தவளை ஓட்டம் லெமன் ஸ்பூன், உருளைக்கிழங்கு சேகரித்தல், பலூன் ஊதுதல், தண்ணீர் பாட்டில் நிரப்புதல், போன்ற விளையாட்டுகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடினர்.

இவ்விழாவினை அனக்காவூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சல்சா வட்டார உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் ஆசிரியர் பயிற்றுநர் தவசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர் கல்வி சிறப்பு பயிற்றுநர்கள் மைய பொறுப்பாளர் உதவியாளர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். விழாவில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு பரிசு பொருள் மற்றும் தேநீர் பிஸ்கட் மதிய உணவு வழங்கப்பட்டது. சீனிவாசன் சிறப்பு பயிற்றுனர் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

Tags

Next Story