விளையாட்டு தின விழா : எஸ்பி பாலாஜி சரவணன் பங்கேற்பு

X
பரிசளிப்பு
தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த 51-வது விளையாட்டு தினவிழாவில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் கலந்து கொண்டார்.
தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் 51-வது விளையாட்டு தினவிழா பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில் ஸ்பிக் நகரியத்தின் முழுநேர இயக்குநரும் ஸ்பிக் பள்ளித் தலைவருமான பாலு, பள்ளித் தலைமை ஆசிரியர் பாபு ராதாகிருஷ்ணன், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இணைந்து கூட்டுப் உடற்பயிற்சியும், பாலர் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. மேலும், மாணவர்களின் ஓயிலாட்டம், காவடி போன்ற நாட்டுப்புற கலைகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக மாணவி ஹேமா வரவேற்றார். நிறைவாக மாணவி ஜனனி நடராஜ பிரியா நன்றியுரை வழங்கினார்.
Next Story
