விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா !

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா !

விளையாட்டு உபகரணங்கள்

திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் சிறுவர்களுக்கான ஹாக்கி பயிற்சி முகாமும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் சிறுவர்களுக்கான ஹாக்கி பயிற்சி முகாமும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் என் .ஜி.ஓ.காலனியில் உள்ள பாரதி வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் என். இளம் பாரதி தலைமை தாங்கினார். பட்டேல் ஹாக்கி அகாடமியின் பயிற்சியாளர் மனிதநேயம் வி.ஞானகுரு முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை டாக்டர்.என்.எம். பி. காஜாமைதீன், திமுக கிழக்கு பகுதி செயலாளரும், முன்னாள் கால்பந்து வீரருமான ராஜேந்திர குமார் மாவட்ட நெட்பால் சங்க துணை தலைவர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு ஹாக்கி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர் .பின்பு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியின் முடிவில் பாரதி வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஐ. முருகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags

Next Story