ஹிலியஸ் குழந்தைகள் பள்ளியில் விளையாட்டு விழா!

ஹிலியஸ் குழந்தைகள் பள்ளியில் விளையாட்டு விழா!

விளையாட்டு விழா 

காட்பாடியில் உள்ள ஹிலியஸ் குழந்தைகள் விளையாட்டு பள்ளியில் எட்டாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
வேலூர் காட்பாடி முத்தமிழ் நகர் பகுதியில் அமைந்துள்ள ஹிலியஸ் குழந்தைகள் விளையாட்டு பள்ளியில் 8-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் ஆனந்தி வரவேற்றார். இந்திய விஞ்ஞானி என்.எஸ்.மணிகண்டன் தலைமை தாங்கினார். முத்தமிழ்நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவரும் ஓய்வுபெற்ற வனச்சரகருமாமன வாசுதேவன், பி.ஹரிதாஸ், ஓய்வு பெற்ற தலைமையாசிரியை மணிமேகலை ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டி பேசுகையில், ‘பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. குழந்தைகளை பாராட்டுங்கள். அதே வேளையில் தவறு செய்தால் பெற்றோர்கள் கண்டிக்க வேண்டும்’ என்றார்.நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் பாட்டு, நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags

Next Story