கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
பரிசளிப்பு 
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விளையாட்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 30வது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கொங்கு வேளாளர் இன்ஸ்டியூட் ஆப் டிரஸ்ட்டின் பாரம்பரிய பாதுகாவலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய அணியின் முன்னாள் கைப்பந்து வீரர் ஜெ.நடராஜன் பங்கேற்று, தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கோப்பைகளும் வழங்கினர்.

பேராசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கி பேசினார். அப்போது, ஜெ.நடராஜன் பேசுகையில், மாணவர்கள் ஒழுக்கத்தை பின்பற்றி வாழ்தல் வேண்டும். குறிப்பாக விளையாட்டு மாணவர்கள் சிறந்து விளங்கவும், ஒழுக்கத்துடன் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் நிச்சயமாக சாதாரண மாணவரும் சாதனையாளராக மாறமுடியும் என்றார். மேலும், தன்னுடைய இளமைக்கால அனுபவங்களை மாணவ, மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார்.

Tags

Next Story