மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா !
விளையாட்டு விழா
ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு வாழ்த்துக்களுடன் நடைபெற்ற விளையாட்டு விழாவில் ஸ்காட் கல்வி குழும தாளாளர் பிரியதர்ஷினி அருண் பாபு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம் பங்கேற்றார்.
கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் வரவேற்புரையாற்றினார், இயக்குனர் மாணவர் சேர்க்கை ஜான் கென்னடி, இயக்குனர் வேலைவாய்ப்பு முகமது சாதிக் மற்றும் கல்லூரி இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் கலந்து கொண்டனர். இதனையொட்டி வாலிபால், கூடைப்பந்து, தடகள போட்டி, ஈட்டி எறிதல், குண்டு எறிதல் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
விழாவில் பேசிய தாளாளர் பிரியதர்ஷினி அருண் பாபு, மாணவர்கள் தங்கள் தனி திறமையை விளையாட்டு போட்டிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். மன அழுத்தம் குறைவதற்கு விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
அவர் பேசுகையில், விளையாட்டு போட்டி என்பது மனிதர்களுக்கு 50க்கும் மேற்பட்ட அனுபவங்களை கொடுக்கிறது. தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும், தோல்வி மனப்பான்மையை ஏற்றுக் கொள்வதற்கும் வழிகாட்டியாக அமைகிறது என்று பேசினார்.
ஓவர் ஆல் சாம்பியன் பட்டத்தை மாணவர் பொன் இசக்கி, மாணவியர் ரம்யா, முருகம்மாள் வென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ஞான முத்துராஜ், கலைச்செல்வி, முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாக மேலாளர் விக்னேஷ் செய்திருந்தார்.