சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் விளையாட்டு விழா

சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் விளையாட்டு விழா

விளையாட்டு விழா

சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் விளையாட்டு விழா. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு.
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மாணவ பேரவை அமைப்பின் மூலம் விளையாட்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் நாகப்பன் தலைமை தாங்கினார். துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சர்வதேச உடற்தகுதி பயிற்சியாளர் ராஜேந்திரன் மணி கலந்து கொண்டு பேசினார். 4-வது கேேலா இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தடகள மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியாளர்கள் கோபிகா மற்றும் கவுரவ்யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். உடற்பயிற்சி இயக்குனர் ஜெயபாரதி விளையாட்டு அறிக்கையை வாசித்தார். மேலும் மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு கொடியேற்றத்துடன் விளையாட்டு குழுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. விழாவின் முடிவில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ஜெயபாரதி, சூர்யா, நுண்கலை அமைப்பின் ஆலோசகர் உமா மகேஸ்வரி, விக்னேஷ்வரா மற்றும் மாணவ பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story