சேலம் தனியார் கல்லூரியில் விளையாட்டு விழா !

சேலம் தனியார் கல்லூரியில் விளையாட்டு விழா !

அன்னபூரணா பொறியியல் கல்லூரி

சேலம் அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

சேலம் அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் அன்னபூரணி சண்முகசுந்தரம் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் அன்புச்செழியன் தலைமை தாங்கி பேசினார்.

சிறப்பு விருந்தினராக விநாயகா மிஷன் உடற்கல்வி கல்லூரியின் முதல்வர் சரவணன் கலந்து கொண்டார். அவருக்கு மாணவர்கள் குழு சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

மேலும் ஐ.கியூ.ஏ.சி. இயக்குனர் சுபாஷினி சிறப்பு விருந்தினருக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசை வழங்கினார்.

விளையாட்டு விழாைவயொட்டி, 100, 200, 400, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முடிவில் உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை தலைவர் குமரவேல், கட்டிடவியல் துறை உதவி பேராசிரியை திவ்யா, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story