புனித அல்போன்சா கல்லூரியில் விளையாட்டு விழா

புனித அல்போன்சா கல்லூரியில்  விளையாட்டு விழா
X
விளையாட்டில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது
கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

குமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் அல்பிக்ஸ் விளையாட்டு தின விழா கொண்டாட்டப்பட்டது. இதன் தொடக்க விழா கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. கபடி வீரரும், இந்திய அரசின் 'அர்ஜுனா விருதினைப் பெற்றவருமான ராஜரத்தினம் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பிரேமானந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு போட்டிகளைத் துவக்கி வைத்தனர்.

நிறைவு விழாவில் தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வரும் கல்லூரி மேலாளருமான பேரருட்பணியாளர் தோமஸ் பவுத்துப்பறம்பில் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வர் முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி எஸ்டிபி, கல்லூரி ஆன்மீக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வர் முனைவர் ஆர் சிவனேசன் ஆகியோர் வெற்றிப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் கேடயங்களையும் வழங்கினர்.

Tags

Next Story