கல்லூரியில் விளையாட்டு விழா

கல்லூரியில் விளையாட்டு விழா

 ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் 23ம் ஆண்டு விளையாட்டு நடைபெற்றது. 

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் 23ம் ஆண்டு விளையாட்டு நடைபெற்றது.

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் 23ம் ஆண்டு விளையாட்டு நடைபெற்றது.

விழாவிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார்.அறக்கட்டளையின் செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கூடைப்பநது அணியின் முன்னாள் கேப்டன் பத்மஸ்ரீ அனிதா பால்துரை பங்கேற்று, விளையாட்டு போட்டியினை கொடியேற்றத்துடன் தொடக்கி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து நடந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் பிரிவினரும், பெண்கள் பிரிவில் கணினி பொறியியல் மற்றும் அறியவியல் பிரிவினரும் வென்றனர். மேலும், இரண்டாம் இடத்தினை ஆண்கள் பிரிவில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவினரும், பெண்கள் பிரிவில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவினரும் பிடித்து வெற்றி பெற்றனர். இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டன் பத்ம‌‌ஶ்ரீ அனிதா பால்துரை பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். மாணவர்கள் தனக்கென ஒரு குறிக்கோளை முடிவு செய்து தேடுதலை விரிவுப்படுத்தவேண்டும். அப்போது எதிர்க்கொள்ளப்படும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி குறிக்கோளினை நோக்கி பயணம் செய்தால் நம்முடைய வெற்றியும், பாராட்டும் உறுதிபடுத்தப்படும்.மேலும், தற்போதைய சூழலில் விளையாட்டு வீரர்களைப் போல அனைத்து துறையிலும் திறன்பட செயலாற்றுவதற்கு தினமும் 45 நிமிட உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

Tags

Next Story