மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் விளையாட்டு விழா

மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் விளையாட்டு விழா

விளையாட்டு விழா

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழாவில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் முனைவர் ரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், 'மாணவர் வாழ்க்கையில் சமுதாயத்திற்கு நாம் என்ன செய்தோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒழுக்கமான முறையிலும், நல்ல நடைமுறையில் இருந்துகொண்டு கல்வி பயின்று அரசு முதன்மைத் தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்று சமூகத்திற்கு சேவை செய்யும் நோக்குடன் பணியாற்றவேண்டுமென்றும் மற்றும் வேலையை எதிர்பார்க்காமல் நீங்கள் பலருக்கு வேலை வாய்ப்பினைக் கொடுப்பதற்கான தகுதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார். ஒரத்தநாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு விளையாட்டுகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கும், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர்தம் உரையில்,"தவறுதல் இல்லாத வாழ்வை வாழ்ந்து காட்டவேண்டும். எதையும் விடாது சமாளித்துக்கொண்டு வாழவும், எப்போதும் ஒழுக்கத்தை காப்பாற்றவும் சிறந்த குறிக்கோள் ஒன்றையே இலக்காக கொள்ளவேண்டும். இளைஞர்கள் முறையான வாழ்க்கையை வாழக் கற்றுகொள்ளவேண்டும். ஒரு மனிதன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கு பிறர் போற்ற வாழவேண்டும்" என்றார். விழாவிற்கு முன்னதாக கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் ஆ.தனசேகர் வரவேற்புரை வழங்கினார்.

இறுதியாக விளையாட்டுத்துறை உதவிப்பேராசிரியர் சு.பிரகாஷ் நன்றியுரையாற்றினார். இவ்விழாவினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கி.உஷா தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story