கும்பகோணம் ஜி.எஸ்.கே பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்ச்சி

கும்பகோணம் ஜி.எஸ்.கே பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்ச்சி
பரிசு வழங்கல் 
கும்பகோணம் ஜி.எஸ்.கே பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணம் ஜி.எஸ்.கே பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்ச்சி கும்பகோணம் அருகே சோழன் மாளிகையில் உள்ள டாக்டர் ஜி.எஸ். கல்யாணசுந்தரம் நினைவு பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் கலந்து கொண்டார். விழாவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் வகையில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர்கள் பாலாஜி, பரமகுரு, உடற்கல்வி துறை தலைவர் ராஜேஷ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story