விருதுநகரில் விளையாட்டு விடுதி சேர்க்கை: ஆட்சியர் தகவல்

விருதுநகரில் விளையாட்டு விடுதி சேர்க்கை: ஆட்சியர் தகவல்
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்
விருதுநகரில் விளையாட்டு விடுதி சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் (CoE) விளையாட்டு விடுதிகள் (SH) மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் (SHE) பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

2024-2025-ம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதி தேர்வு கீழ்க்கண்ட விபரப்படி நடைபெறவுள்ளதால், விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு போட்டியில் பங்கு பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முதன்மை நிலை விளையாட்டு மையம் (CoE) - 6th, 7th மற்றும் 8th ஆகிய வகுப்புகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் தடகளம் (ஆ) &(பெ), குத்துச்சண்டை (ஆ) & (பெ) மேசைப்பந்து (ஆ) & (பெ), டேக்வாண்டோ (ஆ) & (பெ) பளுதூக்குதல் (ஆண்கள் மட்டும்), இறகுப்பந்து (ஆ) & (பெ), வில்வித்தை (ஆ) & (பெ), ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆ) & (பெ), நீச்சல் (ஆ) & (பெ)-டென்னிஸ் (ஆ) & (பெ),- சைக்கிளிங்(ஆ) & (பெ)ஆகிய விளையாட்டுகளுக்கு சென்னையில் மாநில அளவிலான நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

சிறப்பு நிலை விளையாட்டு விடுதி (SHE) (கல்லூரி மாணவ, மாணவியர்க்கான) தேர்வில், தடகளம் (ஆ) & (பெ), குத்துச்சண்டை (ஆ) & (பெ), கபாடி (ஆ) & (பெ), பளுதூக்குதல் (ஆ) & (பெ),-கூடைப்பந்து (ஆ) & (பெ), கையுந்துப்பந்து (ஆ) & (பெ), கைப்பந்து (ஆ) & (பெ), கால்பந்து (ஆ) & (பெ) வாள் விளையாட்டு (ஆண்கள் மட்டும்) - ஹாக்கி (ஆ) & (பெ) - நீச்சல் (பெண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுகளுக்கு மாநில அளவிலான நேரடி தேர்வு நடைபெறவுள்ளது. வி

ளையாட்டு விடுதி மாநில அளவிலான நேரடி தேர்வு (Sports Hostel - State Level Direct Selection) 7th, 8th, 9th & 11th ஆகிய வகுப்புகளுக்கான மாணவ, மாணவியர்களுக்கான குத்துச்சண்டை (ஆ) & (பெ),வாள்விளையாட்டு (ஆ) & (பெ), ஜுடோ (ஆ) & (பெ), பளுதூக்குதல் (ஆ) & (பெ), ஸ்குவாஷ் (ஆண்கள் மட்டும்). டேக்வாண்டோ (ஆ) & (பெ), மல்லர் கம்பம் (ஆண்கள் மட்டும்), மல்யுத்தம் (Wrestling) (ஆண்கள் மட்டும்), வூஷீ (Wushu) (ஆண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுகளுக்கு மாநில அளவிலான நேரடி தேர்வு நடைபெறவுள்ளது. விளையாட்டு விடுதி (Sports Hostel) 7th, 8th, 9th & 11th ஆகிய வகுப்புகளுக்கான தடகளம் (ஆ) & (பெ), கூடைப்பந்து (ஆ) & (பெ), கால்பந்து (ஆ) & (பெ), கைப்பந்து (ஆ) & (பெ), ஹாக்கி (ஆ) & (பெ), கபாடி (ஆ) & (பெ), கையுந்துபந்து (ஆ) & (பெ), கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்), நீச்சல் (ஆண்கள் மட்டும்) - மாவட்ட

விளையாட்டு அரங்கம் விருதுநகரில் ஆண்களுக்கு 10.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும் மற்றும் பெண்களுக்கு 11.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும் நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய கடைசி நாளான சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கு (SHE) 05.05.2024 அன்று மாலை 5.00 மணி வரையிலும், முதன்மை நிலை விளையாட்டு மையம் (CoE) 06.05.2024 அன்று மாலை 5.00 மணி வரையிலும் மற்றும் விளையாட்டு விடுதி (SH) 08.05.2024 அன்று மாலை 5.00 மணி வரை ஆகும். விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ /மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில்

சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் 26.04.2024 முதல் www.sdat.tn.gov.in மற்றும் https://tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இணையதளத்தில் விபரம் பெற்றுக்கொள்ளலாம் (www.sdat.tn.gov.in). மேற்கண்ட தகவலை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story