விளையாட்டில் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பரிசுகளை வழங்கினார்.
தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் பள்ளிகளில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்ட்டது. பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமை தாங்கினார் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், சிறப்பு அழைப்பாளராக வேளாண் மற்றும் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் பரிசுகள் வழங்கினார். இதில் திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன் இளைஞரணி இணை அமைப்பாளர் அசோக்குமார் அணி மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன் ,தர்மபுரி நகர மண்ட உறுப்பினர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி நன்றி கூறினார்.

Tags

Next Story