விளையாட்டுதுறை அமைச்சர் வருகை: ஆலோசனை கூட்டம்
திமுகவினர் ஆலோசனை
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், வருகின்ற டிசம்பர் 3 அன்று திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியில் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது மற்றும் டிசம்பர் 17 அன்று சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது இளைஞர் அணி மாநில உரிமை மீட்பு மாநாட்டில் கலந்து கொள்வது,2024 தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வேலம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட வட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் , மாநில இலக்கிய அணி துணை செயலாளர் திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அண்ணன் திராவிட மணி,வடக்கு மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி,பகுதி கழகச் செயலாளர் ராமதாஸ் , வட்ட கழக செயலாளர்களும், வேலம்பாளையம் பகுதி கழக நிர்வாகிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.