விளையாட்டு பயிற்சி முகாம்: ஏப்.29ம் தேதி தொடக்கம்

விளையாட்டு பயிற்சி முகாம்: ஏப்.29ம் தேதி தொடக்கம்

கோப்பு படம் 

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.29ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.29ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்ட பிரிவு சார்பில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி மற்றும் கைப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுகளில் 2024-ம் ஆண்டுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.29ம் தேதி (திங்கட்கிழமை) துவங்குகிறது. காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் என இருவேளைகளிலும் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி வரை இம்முகாம் நடக்கிறது. ஆண்களுக்கான ஆக்கி பயிற்சி மட்டும் கோவில்பட்டி செயற்கை இழை ஆக்கி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க ரூ.236 பயிற்சி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி முகாமில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் சாலை, தூத்துக்குடி, போன்- 0461- 2321149, செல்போன் 74017 03508 என்ற முகவரியில் அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story