படப்பள்ளியில் விளையாட்டு வாரம் கொண்டாட்டம்

படப்பள்ளியில்  விளையாட்டு வாரம் கொண்டாட்டம்
X

விளையாட்டு வார விழா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி படப்பள்ளியில் பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் கொண்டாடப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி படப்பள்ளியில் பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் கொண்டாட்டம்! கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை படப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நடத்தப்பட்ட இவ்விழாவில், வரைதல், வண்ணம் தீட்டுதல், கதை சொல்லுதல், மாறுவேடப் போட்டி, கைவினை பொருட்கள் செய்தல், பரம்பரிய நடனம், கருவி இசை, பாட்டு, கண்காட்சி, பேச்சு போட்டி, நாட்டிய நாடகம், மற்றும் பல குரல் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரதீபா தலைமை தாங்கிய இவ்விழாவில், பள்ளி மேலாண்மை குழு தலைவி சங்கீதா மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

போட்டிகளில் சிறப்பாக விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் சரண்யா, ரேவதி, சோனியா ஆகியோரின் திறமையான ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவின் நிறைவில், ஆசிரியர் சென்னம்மாள் நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story