புள்ளிமான் வேட்டை - இருவர் கைது

புள்ளிமான் வேட்டை -  இருவர் கைது
X

கைது செய்யப்பட்டவர்களுடன் வனத்துறையினர் 

தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரகத்திற்குட்பட்ட வடக்கு பிரிவு தேவியார் பீட் வனப்பகுதியில் அரசு பாதுகாப்பு காட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த முத்து(47) மற்றும் சின்ன முனியாண்டி (47) ஆகிய இரண்டு நபர்கள் அரிவாள் மற்றும் வேட்டை நாய்களுடன் ஆண் புள்ளிமானை வேட்டையாடுவது குறித்து திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து சிவகிரி வனச்சரக அலுவலர் மௌனிகா தலைமையில் வனத்துறையினர் தனிக்குழுவாக வனப்பகுதிக்குள் சென்று இருவரை விசாரணை செய்ததில் ஆண் புள்ளி மானை வேட்டையாடி வனஉயிரின குற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் வைத்து வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பெயரில் நபர் ஒன்றுக்கு ரூபாய் 65 ஆயிரம் வீதம் இரண்டு நபர்களுக்கு ரூபாய் 1லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வனவிலங்குகளை வேட்டையாடுவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது..

Tags

Next Story