மாடு முட்டியதில் புள்ளிமான் பலி!
ஆணைவாரி கிராமத்துக்குள் வழி தவறி வந்த புள்ளிமான் மேய்ச்சல் நிலத்துக்குள் சென்றபோது, அங்கிருந்த மாடுகள் முட்டியதால் இறந்தது.
ஆணைவாரி கிராமத்துக்குள் வழி தவறி வந்த புள்ளிமான் மேய்ச்சல் நிலத்துக்குள் சென்றபோது, அங்கிருந்த மாடுகள் முட்டியதால் இறந்தது.
திருமயம்: ஆணைவாரி கிராமத்துக்குள் வழி தவறி வந்த புள்ளிமான் ஒன்றை நாய்கள் துரத்தியதில் மேய்ச்சல் நிலத்துக்குள் புகுந்தது. அப்போது அங்கிருந்த மாடுகள் முட்டியதில் புள்ளிமான் பலத்த காயமடைந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் புள்ளிமானை மீட்டு வனத்து றையினருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர். ஆனால், ரத்தம் அதிக அளவு வெளியேறியதால் புள்ளிமான் உயிரிழந்தது. அந்த பெண் மானுக்கு சுமார் 2 வயது இருக்கும். உயிரிழந்த மான் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டது. கடந்த 2 வாரத்துக் குள் திருமயம் பகுதியில் 3 மான்கள் இறந்துள்ளன.
Next Story