துறையூர் அருகே நெல் பயிருக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

துறையூர் அருகே நெல் பயிருக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

டிரோன் மூலம் மருந்து தெளிப்பு 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் கிராமத்தில் நெல் பயிருக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளித்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் பகுதியில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள், எம். ஐ. டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயம் சார்ந்த பல்வேறு களப்பணிகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக உப்பிலியபுரம் கிராமத்தில் அமைந்துள்ள விவசாயி செல்லதுரை வயல் வெளியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் ட்ரோன் முறை மருந்து தெளித்தல் பற்றி ட்ரோன்காரன் (farmxt) நிறுவனத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டிடனர்.

இதன் முலம் விவசாயிகளுக்கு நேரம் மற்றும் செலவினத் தொகை குறைக்கப்படுவதாகவும் எடுத்துக் கூறினர். இந்நிகழ்வில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் அனுஷா.ச,அபிராமி, கோ,ஆக்லின், செரின்.ச,அலமேலு. இரா,அனுஷா.க.அர்ச்சனா.சி.சீ,ஆர்த்தி.ரா, அருந்ததி.பா.ரே, அஸ்வினி.வெ, பைரவி.மீ மற்றும் எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் துர்கேஷ்.செ,கோகுலபிரகாசம்.சி,கௌதமன்.செ,குணாளன்.மு,இஷாக்.சே.மு,ஜெயராகவன்.மு,ஜெயந்த் ராஜன்வி.ச,கார்திகேயன். ஆகியோர் கலந்து கொண்டு வேளாண் ட்ரோன் கருவியின் பயன்பாடுகள் பற்றி எடுத்துரைத்தனர்.

மேலும், வேளாண் ட்ரோன் கருவியின் பல்வேறு வகையான பயன்பாடுகள் பற்றி farm XT நிறுவன அதிகாரிகளிடன் கலந்துரையாடி செயல் விளக்கம் பெற்றனர்.

Tags

Next Story