பூச்சி தாக்குதலை தடுக்க மருந்து தெளிக்கும் பணி

பூச்சி தாக்குதலை தடுக்க  மருந்து தெளிக்கும் பணி
மருந்து தெளிக்கும் பணி
மா மரங்களை பூச்சி தாக்குதலில் இருந்து தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூச்சி கொல்லி மருந்து தெளிக்கும் பணியானது இடைக்கழிநாடு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இடைக்கழிநாடு பகுதிகளில் சுமார் 1,000 -த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மாமரம் பயிரிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கோடைகாலங்களில் மாம்பழம் சீசன் என்றாலே இங்கு களை கட்டுவது வழக்கம். இங்கு விளையும் மாம்பழங்களானது இங்கேயே நேரடியாக விற்பனை செய்வதும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தற்போது மாமரங்களானது பூ பூத்து பிஞ்சு வைக்கும் நிலையில் உள்ளது. பெரும்பாலான பூச்சிகள் இந்த நிலையிலேயே மா மரங்களை தாக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ' மைக்ரோ-புட்' எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் 2 மி. லி. , என கலந்து 1 ஏக்கருக்கு சுமார் 150 முதல் 200 லிட்டர் வரை பம்பு இயந்திரம் மூலமாக பூச்சி கொல்லி மருந்து தெளிக்கும் பணியானது இப்பகுதியில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story