ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், கோணை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீபூரணி பொற்கலை சமேத ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கோணை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீபூரணி பொற்கலை சமேத ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலை கணபதி ஹோமம், சுத்தி புண்யாக வாசம், எஜமானா் சங்கல்பம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பிற்பகல் 12 மணிக்கு பூா்ணாஹுதி தீபாராதனையும், மாலை வாஸ்து பூஜை, பிரவேசபலி, அங்குராா்ப்பணம் உள்ளிட்டவை நடைபெற்றது.

சனிக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில், மஹா பூா்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. மாலையில் நடைபெற்ற மூன்றாம் கால யாகசாலை பூஜையில், பிரம்மச்சாரி பூஜை, கன்னிகா பூஜை, தம்பதி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜையில் கணபதி வழிபாடு, கோ பூஜை, நாடி சந்தானம், தத்துவாா்ச்சனை, மஹா பூா்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, காலை 9 மணிக்கு கலச புறப்பாடு நடைபெற்று அருள்மிகு ஸ்ரீபூரணி பொற்கலை சமேத ஸ்ரீஐய்யனாா் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவா் மற்றும் ஸ்ரீவீரபத்திரன், ஸ்ரீசப்தகன்னிகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவில், கோணை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா கே.சுப்பிரமணி மற்றும் குல தெய்வ வழிபாட்டாா்கள், உபயதாரா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Tags

Next Story