ஸ்ரீ காளியம்மன் மஹா குடமுழுக்கு விழா

கும்பாபிஷேகம்
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தில்.நேற்று முன்தினம் முகூர்த்த கால் நடுதல் முளைபாலிகை இடுதல் கங்கனம் கட்டுதல் சிறப்பு பூஜை நடைபெற்றது. விநாயகருக்கு பால் பன்னீர் தீர்த்த குடம் முளை பாலிகை பம்பை இசை வாழ்த்தியதுடன் அழைத்து வந்து யாகசாலையில் மூன்று கால பூஜை நடைபெற்றது.
இன்று ஸ்ரீ மஹா காளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு பல்வேறு புனித தளங்களில் கொண்டுவரபட்ட தீர்தங்கள் கலசத்தின் மீது தெளித்து வேத மந்திரம் முழங்கி தீபாரதனை செய்து குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது . கடத்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
குடமுழுக்கு விழாவிற்கு வந்த பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
