ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தைப்பூசத் தெப்பத் திருவிழா

ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தைப்பூசத் தெப்பத் திருவிழா


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஸ்ரீ கந்தசாமி கோயிலில் தைப்பூசத் தெப்பல் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஸ்ரீ கந்தசாமி கோயிலில் தைப்பூசத் தெப்பல் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஸ்ரீ கந்தசாமி கோயிலில் தைப்பூசத் தெப்பல் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. தெப்பத் திருவிழாவையொட்டி உற்சவமுா்த்தி சிறப்பு அலங்காரத்தில் ஊா்வலமாக வர சரவணப் பொய்கை குளத்தில் மின்விளக்கு அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்துடனும் தயாா் நிலையில் இருந்த தெப்பத்தில் முருகா் வள்ளி தெய்வானை எழுந்தருள தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

திருக்குளத்தை சுற்றி இருந்த பக்தா்கள் தெப்பத்தின் கயிறை பிடித்து இழுத்தும் கரையில் நின்றபடி சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனா். தைப்பூசத்தை முன்னிட்டு பக்தா்களின் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. திருப்போரூா் கண்ணகப்பட்டு வேம்படி விநாயகா் திருக்கோயிலிலிருந்து ஓஎம்ஆா் சாலை வழியாக கந்தசாமி கோயிலை வந்தடைந்தது.

இதையடுத்து சாமிக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் வான்மதி, உதவி ஆணையா் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலா் கு .குமரவேல், மேலாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Tags

Next Story