ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

சீர்காழி அருகே அனுமந்தபுரம் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் திருப்பணிகள் செய்யப்பட்டது,மேலும் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன், முதல் கால யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது.

இன்று காலை 3 ம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து. பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தன. மங்கள வாத்தியங்கள் இசைக்க, கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story