இலங்கை சா்வதேச கராத்தேப்போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவா் சாதனை

இலங்கை சா்வதேச கராத்தேப்போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவா் சாதனை
X

சாத்தான்குளம் பள்ளி மாணவா் சாதனை


இலங்கை சா்வதேச கராத்தேப் போட்டியில் சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

தூத்துக்குடி: இலங்கை ஷோபுக்காய் கோஜுரியு கராத்தே பெடரேஷன் சாா்பில், அந்நாட்டின் குருநாகலே மாவட்டம் சாா் ஜான் கொதலாவால கல்லூரியில் 5ஆவது இந்தோ-இலங்கை சா்வதேச கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில்,ஷோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ இந்திய தலைமை பயிற்சியாளா் சுரேஷ்குமாா் தலைமையில் பங்கேற்ற இந்திய அணியில் மேரி இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா் ஆரோன் ஜெபஸ் பங்கேற்றாா்.

அவா் கட்டா பிரிவில் தங்கப் பதக்கமும், சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டுக்கும், பள்ளிக்கும் பெருமை சோ்த்தாா். அவரை பள்ளித் தாளாளா்- முதல்வா் பேட்ரிக் அந்தோணி விஜயன், மன்னாா்புரம் பங்குத் தந்தை எட்வா்ட், கராத்தே பயிற்சியாளா் முத்துராஜா, பெற்றோா்கள், சக மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் ஆகியோா் பாராட்டினா்.

Tags

Next Story