பெரம்பலூரில் இலங்கை தமிழர் தூக்குப்போட்டு தற்கொலை
பெரம்பலூரில் இலங்கை தமிழர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமினை சேர்ந்தவர் யோகேந்திரன் வயது 40. இவருடைய மனைவி காசினி 34. இவர்களுக்கு பிரகாஷினி 17-என்ற மகளும், சுரேந்தர் -14 என்ற மகனும் உள்ளனர். யோகேந்திரன் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி அலுவலகம் முன்பு இரவில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் யோகேந்திரன் பிப்ரவரி 21ம் தேதி, அதிகள் முகாம் அருகே உள்ள வயலிலுள்ள மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனைக் கண்டவர்கள் அவரது குடும் பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யோகேந்திரனின் குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறிஅழுதனர். மேலும் இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர்போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து யோகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பிப்ரவரி 22ம் தேதி காலை 11 மணியளவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் யோகேந்திரன் தனது மனைவியிடம் ஏற்பட்ட பிரச் சினை காரணமாக கடந்த 5 நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story