சேலம் : ஸ்ரீ மஹா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சேலம் : ஸ்ரீ மஹா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகம்

எடப்பாடி அருகே அம்மன் காட்டூர் பகுதியில் ஸ்ரீ மஹா கணபதி ஸ்ரீ மஹா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் தங்கயூர் கிராமம் அம்மன் காட்டூர் பகுதியில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீ மஹாகணபதி ஸ்ரீ மஹாகாளி அம்மன் கோபுர மூலவர் பரிவார கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றது.

மங்கள வாத்தியம் முழங்க யாகசாலையில் இருந்து சிவாச்சாரியர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றி வந்து முதலில் அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி கோவிலிலுள்ள கோபுர கலசத்திற்கும் அடுத்ததாக ஸ்ரீ மஹாகாளியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கும் புனித தீர்த்தத்தம் ஊற்றி ஓம்சக்தி என முழக்கமிட்டபடி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாதாரணையை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ மஹா கணபதி,ஸ்ரீ மஹாகாளியம்மன் சுவாமிக்கும் புஷ்பங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் பூஜை. நடைப்பெற்றது இந்த கும்பாபிஷேக விழாவில் தங்காயூர் கிராமம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story