செக்கணத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

செக்கணத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
செக்கணத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, திருக்காம்புலியூர் கிராமத்தில் உள்ள செக்ணத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் காலை யாகபூஜை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக வேள்வியில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை உச்சாடனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. கும்பாபிஷேகம் விழா நிறைவடைந்த உடன் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு தீபாதாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story