ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
வீரமநல்லூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் திருத்தேர் விழா கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வீரமநல்லூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் திருத்தேர் விழா கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முத்து மாரியம்மன் வீதி உலா வந்தது. 9-ம் திருவிழாவான நேற்று வாணவேடிக்கை மற்றும் தாரை தப்பட்டை, மேளதாளத்தோடு சுவாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்.
மாலை 3 மணி அளவில் கோயில் நிர்வாகம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வீரமநல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள் வரதராஜன், கந்தசாமி, குமார். ரங்கசாமி. துரைசாமி, செந்தில் ஆகியோர் செய்து இருந்தனர். குன்னம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது