திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் ஸ்ரீ ராம தீப வழிபாடு

திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் ஸ்ரீ ராம தீப வழிபாடு
X

தீப வழிபாடு நடத்திய சிறுவர்கள்

திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் ஸ்ரீ ராம தீப வழிபாடு நடைபெற்றது.

அயோத்தியில் ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை விழா திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை அலுவலகத்தில் வில் வடிவத்திலான 108 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டு ஸ்ரீராம தீப வைபவம் நடைபெற்றது. தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் குழந்தைகள் ராம பஜன் பாடினார்கள். ஸ்ரீநிதி ராமர் தாலாட்டு பாடலை பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ராமர் திருவுருவ படத்திற்கு துளசி அர்ச்சனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேசிய சிந்தனை பேரவை பொதுச் செயலாளர் குமரவேல் பொருளாளர் மனோகரன் செயற்குழு உறுப்பினர்கள் சிவக்குமார் ராஜேந்திரன் கயல் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கு கொண்டனர்.நிறைவில் ஸ்ரீஹரி நன்றி கூறினார்.

Tags

Next Story