ஸ்ரீராமானுஜரின் 1007-ஆவது திருநட்சத்திர விழா

ஸ்ரீராமானுஜரின் 1007-ஆவது திருநட்சத்திர விழா

ஸ்ரீராமானுஜர் 

வந்தவாசி அருகே ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீராமானுஜரின் 1007-ஆவது திருநட்சத்திர விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமானுஜரின் 1007-ஆவது திருநட்சத்திர விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ கைங்கர்யம் அமைப்பு சார்பில் ஸ்ரீ ராமானுஜரின் மூலவர் திருமேனிக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story