விநாயகர் கோவிலில் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி சிறப்பு !
ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி
சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு ஸ்ரீ ஓடைப்பட்டி வன்னி விநாயகருக்கு பால், பன்னீர் ,சந்தனம், ஜவ்வாது,தேன், பேரிச்சம்பழம் , மற்றும் திருநீர் போன்ற 16 வகையான திவ்ய பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேகம் முடிந்த பின்பு ஸ்ரீ ஓடைப்பட்டி வன்னி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அலங்காரம் முடிந்த பின்பு விநாயகருக்கு சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் விநாயகர் கோவிலில் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்மற்றும் பூஜை. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற ஓடைப்பட்டி வன்னி விநாயகர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு சங்கட சதுர்த்தி அன்றும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் பூஜை நடைபெறும். இன்று சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு ஸ்ரீ ஓடைப்பட்டி வன்னி விநாயகருக்கு பால், பன்னீர் ,சந்தனம், ஜவ்வாது,தேன், பேரிச்சம்பழம் , மற்றும் திருநீர் போன்ற 16 வகையான திவ்ய பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேகம் முடிந்த பின்பு ஸ்ரீ ஓடைப்பட்டி வன்னி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அலங்காரம் முடிந்த பின்பு விநாயகருக்கு சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றது. சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த வன்னி விநாயகர் பக்தர்களுக்கு அருள் அளித்தார். கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story