ஸ்ரீ உக்கிர காளியம்மன் திருவிழா

ஸ்ரீ உக்கிர காளியம்மன் திருவிழா
உக்கிர காளியம்மன் திருவிழா 
தென்புதூர் கிராமத்தில் ஸ்ரீ உக்கிர காளியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தில் நடைப்பெறும் மிக பெறிய திருவிழாவான ஶ்ரீ கருமாரியம்மன் மற்றும் ஸ்ரீ உக்கிர காளியம்மன் திருவிழா. இது ஆண்டு தோரும் வைகாசி மாதம் 6,7,8 ஆகிய தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்தும் இந்த ஆண்டும் திருவிழா நேற்று முன்தினம் முதல் தொடங்கி வழக்கம் போல் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. விழா நாளன்று காலையில் அம்மனுக்கு பல்வேறு மூலிகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைப்பெற்றது. அடுத்தபடியாக ஊர் முழுவதும் பொங்கல் கூடை எடுத்து தலைமீது வைத்து பூங்கரகம் ஏந்தி பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், கோலாட்டம், நையாண்டி, கரகாட்டம், சிலம்பாட்டம், தாரை தப்பட்டை முழங்க சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து கோவிலில் சன்னதியே வந்தடைந்தனர். பின் கோயில் சன்னதியில் பொங்கல் வைத்து படையலிட்டு ஆடு, கோழிகள் என பலிகொடுத்து வழிபட்டனர்.பின்னர் மக்கள் பொங்கல் வைத்ததை ஒன்றாக இலை மீது படையல் போட்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினர்.

Tags

Next Story