ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

மடவார் வளாகத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவைத்தியநாத சுவாமிகோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது.


மடவார் வளாகத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவைத்தியநாத சுவாமிகோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவைத்தியநாத சுவாமிகோவில்கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் 1000 ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவகாமி அம்மாள் உடனுறை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் சூளை நோயால் அவதியுற்ற போது இங்கு கோவில் கொண்டுள்ள வைத்தியநாத சுவாமியை வழிபட்டு சூளை நோய் நீங்கப் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் வைகாசி விசாகத் திருவிழா கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மேலும் இங்கு நடைபெறும் பிரதோஷ பூஜை குறிப்பாக சனி பிரதோஷ பூஜையில் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற்பர். இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 18 வருடங்களுக்குப் பின்பு தற்போது இக்கோவிலின் கும்பாபிஷேக பணிகள் கடந்த வருடம் துவங்கியது. சுமார் ஒரு வருடங்களாக நடைபெற்ற கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்து வரும் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இன்று யாகசாலை பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக இறுதி கட்டப்ணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தில் இறுதி பணிகளான பரிவார தெய்வங்கள் மற்றும் வைத்தியநாதசுவாமி, சிவகாமி அம்பாள் மூலவர் சிலைகளுக்கு தற்போது மருந்து வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக காலையில் யாகசாலை பூஜையில் கணபதி ஹோமத்தில் ஆரம்பித்து ரிக், யஜுர்,சாம, அதர்வண வேதங்கள் ஓதப்பட்டு வருகிறது. யாகசாலை பூஜையில் ஒரு இராஜகோபுரம் 6 விமானங்கள் உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் ஊற்றப்படும் புனித நீர் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story