அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா.

கரூர் மாவட்டம் நெடுங்கூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, நெடுங்கூர் கிராமத்தில் உள்ள மேல் நெடுங்கூர் பகுதியில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, மந்திரங்களை உச்சாடனம் செய்து, சிவாச்சாரியார்கள் புனித நீருக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர்,கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் புனித நீரை சுமந்து கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, பின்னர் புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து கோவில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மூலவருக்கு மகா தீபாரணை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் வந்திருந்தார். அவருக்கு கும்பாபிஷேக விழா கமிட்டியினர் வரவேற்பு அளித்து மரியாதை செய்தனர். பின்னர் அவர் சுவாமி தரிசனம் செய்து அனைவரிடமும் விடை பெற்று சென்றார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story