ஸ்ரீதலா தேவி மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா

ஸ்ரீதலா தேவி மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் ஸ்ரீதலா தேவி மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் ஸ்ரீதலா தேவி மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பத்துக்கட்டு கிராமத்தில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் ஏழாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழாவை முன்னிட்டு பால்குட திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பத்துக்கட்டு குளக்கரையில் இருந்து சக்தி கரகம் சிறப்பு பூஜைகளுடன் புறப்பாடு செய்யப்பட்டு பம்பை மேல வாத்தியங்கள் முழங்க 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வீதி உலாவாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பால்குடம் மற்றும் பால் காவடி எடுத்து வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. பக்தர்கள் பால் குடத்துடன் கோவிலை சுற்றி மூன்று முறைவளம் வந்து பின்னர் சிதளா தேவி மாரியம்மன்க்கு இளநீர், தேன், சந்தனம், உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடம் உள்ள பாலைக் கொண்டு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story